×

திருமணமாகாத பெண்களுக்கு வேலையில்லை: ஆப்கானில் தலிபான்களின் அடுத்த அதிரடி.! ஐ.நா அறிக்கையில் தகவல்

காபூல்: கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, அந்நாட்டு பெண்களுக்கு பலவகையில் பொது சேவைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்ல உரிமை இல்லை. பெண்களின் சுதந்திரம், ஆடைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல், சலூன்களை மூடுதல், பூங்காக்களுக்கு அனுமதி மறுத்தல் போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆண் பாதுகாவலர் அல்லது கணவர் இல்லாத பெண்கள், பொதுவெளியில் பயணம் செய்வதற்கும், பணி செய்வதற்கும் தலிபான்கள் தடை விதித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், சமீபத்தில் சுகாதாரத்துறையில் பணிபுரிய வந்த பெண்ணை பணி நீக்கம் செய்ததன் மூலம் தலிபான் அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளது. அந்தப் ெபண் மேலும் பணி செய்ய விரும்பினால், ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தலிபான்கள் கூறியுள்ளனர். எனவே திருமணமாகாத பெண்கள் பொது சேவையில் பணிபுரிவது சாத்தியமற்றதாக உள்ளதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிட்டட்டுள்ளது.

The post திருமணமாகாத பெண்களுக்கு வேலையில்லை: ஆப்கானில் தலிபான்களின் அடுத்த அதிரடி.! ஐ.நா அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Taliban ,Afghanistan ,UN ,Kabul ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் நேற்று பெய்த திடீர்...