×

கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதன் மூலம் பதிவுத் துறையில் நேற்று ரூ.168.83 கோடி வருவாய்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல்

சென்னை: கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதன் மூலம் பதிவுத் துறையில் நேற்று ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தை பொங்கலுக்கு பின்வரும் நாட்களில் பதிவுத்துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் 31.01.2024 வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதனை உறுதி செய்யும் வகையில் நேற்றையதினம் மட்டும் அதாவது 22.01.2024 அன்று மட்டும் 21,004 ஆவணங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு 168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. புதிய கூட்டு மதிப்பின் அடிப்படையின் கீழ் 22.01.2024 அன்று சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன்மூலம் பெறப்பட்ட ரூபாய் 12 கோடி வருவாயும் இதில் அடங்கும். இனி வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதன் மூலம் பதிவுத் துறையில் நேற்று ரூ.168.83 கோடி வருவாய்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Commercial Tax and Registration Department ,Tai ,Pongal ,Dinakaran ,
× RELATED தர்பூசணி உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பங்கள்