×

ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: அசாமில் மீண்டும் பரபரப்பு

கவுகாத்தி: இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. கவுகாத்தி எல்லையான கானாபுராவில் அசாம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் அமித்ஷா உத்தரவின்பேரில் அசாம் முதல்வர் தமது யாத்திரையை கவுகாத்திக்குள் நுழைய விடாமல் தடுப்பதாக ராகுல் குற்றம் சாடினார். குவாஹாத்தியில் உள்ள பல்கலை. மாணவர்களை சந்தித்து தான் பேசக்கூடாது என்பதாகவே தடுக்கப்படுவதாகவும் குற்றம் சாடினார். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ராகுல் காந்தியை குவாஹாத்தி எல்லைக்குள் நுழைய விடாமல் போலீஸ் தடுப்பதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

The post ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: அசாமில் மீண்டும் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Assam ,Guwahati ,Indian Unity Justice Yatra ,Assam State ,Assam Police ,Kanapura ,Minister ,Amit Shah Uttara ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...