×

ராமநாதபுரத்தில் புதிய நூலகம் கட்டடம் கட்ட உத்தரவிட கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளையில் அரசு அறிக்கை தாக்கல்

மதுரை: ராமநாதபுரத்தில் புதிய நூலகம் கட்டடம் கட்ட உத்தரவிட கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தொண்டியில் பழுதடைந்து உள்ள பழைய நூலகத்தை இடித்து புதிய நூலகம் கட்டிடம் கட்ட உத்தரவிட கோரி மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருத்தார். இந்த வழக்கு தொடர்பாக நூலகங்கள் மறு சீரமைப்பு செய்ய ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், நீதிபதிகள் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ்நாடு இவ்வாண்டில் 500 சதுர அடியில் 821 புதிய நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தொண்டியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழுதடைந்து உள்ள 25 நூலக கட்டிடங்களை இடித்து புதிய கட்டடம் கட்ட நூலக நிதியிலிருந்து அனுமதி தரப்பட்டுள்ளது. என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ராமநாதபுரத்தில் புதிய நூலகம் கட்டடம் கட்ட உத்தரவிட கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளையில் அரசு அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,iCourt ,Madurai ,Tamil Nadu government ,Court ,Thandi ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’