×

சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வீரவநல்லூர், ஜன.23: சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் வெளியிட்டார். சேரன்மகாதேவி கோட்டத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய இறுதி வாக்காளர் பட்டியலை சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் நேற்று வெளியிட்டார். இதையொட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்துகொண்டு இறுதி வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டனர். இதில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் பகவதிபெருமாள், தாசில்தார்கள் சேரன்மகாதேவி ரமேஷ், அம்பாசமுத்திரம் சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Cheranmahadevi Sub-Collector's Office ,Veeravanallur ,Sub ,Collector ,Arbit Jain ,Cheranmahadevi Sub-Collector ,Ambasamudram ,Nanguneri ,Radhapuram ,Cheranmahadevi ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி