×

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் மறியல்

திருக்கோவிலூர், ஜன. 23: அரகண்டநல்லூர் பகுதியில் திருக்கோவிலூர் -விழுப்புரம் நெடுஞ்சாலையை ஒட்டிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த அரகண்டநல்லூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.25 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்ய கொண்டு வந்தனர். அப்போது விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாலை வரை விலை நிர்ணயம் செய்யாததால் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வியாபாரிகளை கண்டித்து 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருக்கோவிலூர்- விழுப்புரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா மற்றும் போலீசார் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக விலை பட்டியலை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Aragandanallur ,Thirukovilur ,Thirukovilur-Villupuram ,Aragandanallur Agricultural ,Regulation Hall ,Kallagurichi District ,Villupuram ,Aragandanallur Regulation Hall ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!