×

ராமதாஸ் வலியுறுத்தல் டிஎன்பிஎஸ்சி புள்ளியியல் பணி தேர்வுக்கு உடனே கலந்தாய்வு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட கால அட்டவணைப்படி ஜனவரியில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டன. அதன்பின் ஒரு மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 5 மாதங்கள் ஆகியும் அதற்கான ஏற்பாடுகளைக்கூட செய்யவில்லை. அதேபோன்று, ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, 16 மாதங்களாகியும் தேர்வு நடைமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே, ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை உடனடியாக வெளியிட்டு ஒரு மாதத்திற்குள் கலந்தாய்வை நடத்தி, வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.

The post ராமதாஸ் வலியுறுத்தல் டிஎன்பிஎஸ்சி புள்ளியியல் பணி தேர்வுக்கு உடனே கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Ramadas ,TNPSC ,CHENNAI ,BAMA ,Ramadoss ,Tamil Nadu Government Staff Selection Commission ,TNPSC Statistics Work Exam ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து: ராமதாஸ் வரவேற்பு