×

காதலியை கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 சிறுவர்கள் கைது

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் அருகே உள்ள ஆல்பேட்டை கன்னி கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன்(50). டாஸ்மாக் கடை விற்பனையாளர். கடந்த 20ம் தேதி நள்ளிரவு மோகன் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். இதில் கதவின் வெளியே இருந்த ஸ்கீரின் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து மோகன் அளித்த புகாரில் கடலூர் புதுநகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பெட்ரோல் குண்டு வீசிய ஆல்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்களை நேற்று காலை பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2 சிறுவர்களில் ஒருவன் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை காதலிப்பதாகவும், அந்த சிறுமியின் குடும்பத்தாரும் மோகனின் குடும்பத்தாரும் குடும்ப நண்பர்கள் என்பதால், மோகன் குடும்பத்தினர் அந்த சிறுமியை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் ஆற்று திருவிழா முடிந்து இரவு தனது நண்பனுடன் சேர்ந்து மோகனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

The post காதலியை கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Cuddalore ,Mohan ,Albatai Kanni Koil Street ,Manjakuppam, Cuddalore ,Dinakaran ,
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்