×

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து திருப்பூருக்கு திரும்பிய பனியன் தொழிலாளர்கள்

 

திருப்பூர், ஜன.22: பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பியதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதியது. திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதன் பின்னர் குறைந்து 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை எடுத்து விட்டு திருப்பூருக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை கொண்டாட தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13ம் தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டன. இந்நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் திறந்து செயல்பட உள்ளன. இதனால் பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு நேற்று காலை முதலே திரும்ப தொடங்கினர். இதன் காரணமாக ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது.

The post பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து திருப்பூருக்கு திரும்பிய பனியன் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Banyan ,Tirupur ,Pongal holiday ,Banyan Company ,Tamil Nadu ,northern ,Pongal festival holiday ,Dinakaran ,
× RELATED ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பால் பனியன் தொழில் பாதிப்பு: கமல் குற்றச்சாட்டு