×

நாடாளுமன்ற தேர்தலில் தலித்களுக்கு 2 தொகுதி; முன்னாள் எம்பி விஸ்வநாதன் வலியுறுத்தல்

சென்னை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கான 35 பேர் கொண்ட தேர்தல் குழுவுடனான ஆலோசனை கூட்டம் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது.

மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் முன்னிலை வகித்தார். மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன் மற்றும் எம்பிக்கள் ஜெயக்குமார், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், முன்னாள் எம்பி விஸ்வநாதன், நாசே ராமச்சந்திரன் உட்பட குழுவில் இடம்பெற்றவர்கள் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்பி விஸ்வநாதன் பேசுகையில்,‘‘தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக்கூடிய தொகுதி எண்ணிக்கையில் தலித்துகளுக்கு 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். ஏனென்றால் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலித்துகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் 2 தொகுதி ஒதுக்க மேலிடத்தை வலியுறுத்துகிறேன்’’ என்றார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் தலித்களுக்கு 2 தொகுதி; முன்னாள் எம்பி விஸ்வநாதன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Dalits ,Vishwanathan ,Chennai ,Tamil Nadu Congress Party ,K. S. ,Satyamoorthipavan ,Akhgiri ,Senior ,Ajoy Kumar ,Dinakaran ,
× RELATED மத்தியில் காங்கிரஸ் ஆட்சி...