வந்தவாசி, ஜன.21: பொதுமக்கள் ஏற்படுத்திய தடுப்பு சுவரை இடித்த வருவாய் ஆய்வாளரை கண்டித்து வந்தவாசி தாலுகா அலுலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வந்தவாசி அடுத்த வெளியம்பாக்கம் பசுவத்தான் பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடுகட்டி வருகின்றார். அதில் இரு திசையில் வாசல் கதவு வைப்பதற்கு ஏற்றவாறு கட்டிடத்தை கட்டியுள்ளார். அதில் தெருவில் படி அமைக்க படுவதால் அத்தொருவில் பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன் அருகில் உள்ள பழைய தொலைகாட்சி பெட்டி அறைகட்டிடத்தையொட்டியவாறு உள்ள பகுதியை இவர் ஆக்கிரமிப்பாளர் என கருதி கிராம மக்கள் கடந்த 3 மாத்திற்கு முன்பாக தெற்கு பகுதி வாசல் கதவு முன்பாக அவர் வெளியே வரமுடியாதப்படி சுமார் 20 அடி நீளத்திற்கு 3 அடி உயரத்தில் சுவர் எழுப்பினார்கள்.
இதுகுறித்து சிரஞ்சீவி வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வருவாய் துறையினர் நேற்று முன்தினம் ஜேசிபி இயந்திரம் மூலமாக பொதுமக்கள் ஏற்படுத்தி இருந்த 20 அடி நீள சுவரை வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் தலமையில் இடித்து அகற்றினர். மேலும் சிரஞ்சீவியிடம் வாசல் கதவு வைத்துக்கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம், ஆனால் பக்கவாட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு ஏற்படுத்திக்கொள்ளகூடாது என எச்சரிக்கை செய்தனர். இந்நிலையில் நேற்று அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்தவாசி தாலுகா அலுவலகம் வந்து சுவரை இடித்த வருவாய் ஆய்வாளர் வெங்கடேசனை கண்டித்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் பொன்னுசாமி சமரச பேச்சுவார்தை மேற்கொண்டார். மேலும், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு நடிவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
The post வருவாய் ஆய்வாளரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் வந்தவாசி தாலுகா அலுலகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.