×

ஜன.26ம் தேதி கிராமசபை கூட்டம் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஜன.21: குமரி மாவட்ட கலெக்டர் தர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண்வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்திடவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26ம் தேதி காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது. அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொது மக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் இக்கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.எனவே பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜன.26ம் தேதி கிராமசபை கூட்டம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Nagercoil ,Kumari District ,Collector ,dar ,Republic Day ,Dinakaran ,
× RELATED குடிபோதையில் வாகனம் ஓட்டிய 33 பேருக்கு ₹10 ஆயிரம் அபராதம்