×

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி அடுத்த பெரியமோட்டூர் கிராமத்தில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. கிருஷ்ணகிரி ஒன்றியம், அகசிப்பள்ளி ஊராட்சி பெரியமோட்டூர் கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு 1.50 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி, புதுமைப்பெண் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு வானவில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட செயல்பாடுகளின் நிகழ்ச்சிகள் குறித்த 100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. அத்துடன், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த புகைப்படக் கண்காட்சியை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

The post அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Periyamotour ,Tamil Nadu government ,Krishnagiri Union ,Agasipalli Panchayat Periyamotour ,News Public Relations Department ,Achievement Photo Exhibition ,Government's Achievement Photo Exhibition ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்