×

கூடலூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தும் பணி: வனத்துறையினர் தீவிரம்


கூடலூர்: கூடலூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மதுரை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கம்மாத்தி மற்றும் கூடலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட விமலகிரி உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக 2 குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று நடமாடுவதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். மேலும் கிராம எல்லைப் பகுதிகளில் உள்ள புதர்களில் இரவு நேரங்களில் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் கேமரா பொருத்தி சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தை தனது குட்டிகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி செய்து வரலாம். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

The post கூடலூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தும் பணி: வனத்துறையினர் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,panchayat ,Nilgiri district ,Kammathi ,Vimalagiri ,Dinakaran ,
× RELATED கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய...