×

கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை: வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியது

கூடலூர் : கோடை மழையால் முதுமலை பகுதி பசுமைக்கு திரும்பியது. வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கியது. நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மழை இல்லாததால் தண்ணீரின்றி சிற்றோடைகள், வனப்பகுதிகளில் உள்ள குளம் குட்டைகள் வறண்டது. புல்வெளிகள் கருகியதால் வனவிலங்கு உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவை வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்தியதுடன், விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

கிராமங்களில் வீடுகள்முன் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளை உடைத்து தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக்கொண்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இந்த நிலையில் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் தொடர்ச்சியாக கோடை மழை பெய்தது. இதனால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது. தொடர் மழையால் காட்டுத் தீ அபாயமும் குறைந்தது. முதுமலை வனப்பகுதியில் உள்ள பெரும்பாலான நீராதார பகுதிகளான குளம், குட்டைகளில் தண்ணீர் நிறைந்துள்ளதால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.

The post கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை: வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியது appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,Cuddalore ,Kudalur district ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED மருதமலை வனப்பகுதியில் தாயுடன்...