×

நாளை பொது விநியோக குறைதீர் முகாம்

 

மதுரை, ஜன. 19: மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த பொதுமக்களுக்கான குறைதீர் முகாம் நாளை (ஜன.20) நடக்கிறது. இதன்படி, குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இம்முகாம் நடைபெற உள்ளது.

இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு, மாற்றம், அங்கீகாரச் சான்று, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் மற்றும் இதர குறைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் நேரடியாக முகாம் அலுவலரிடம் வழங்கி தீர்வு பெறலாம். இத்தகவல் மாவட்ட வழங்கல் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை பொது விநியோக குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,District Collector of Civil Supplies and ,District Supply ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!