×

வேளாண்மை விரிவாக்க சேவைக்கான பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் தகவல்

 

ஈரோடு, ஜன.19: வேளாண்மை விரிவாக்க சேவைக்கான பட்டயப்படிப்பில் சேர இடுபொருள் விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில், வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு, வேளாண் விரிவாக்க சேவைக்கான சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சேருவதற்கு குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்வு எழுதி இருக்க வேண்டும்.

தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமில்லை. சுயநிதி முறையில் படிப்பவர்களுக்கு ரூ. 20,000 கட்டணம். இடுபொருள் விற்பனையாளர்கள், உரிமம் பெற்றவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். எனவே, அவர்கள் ரூ. 10,000 செலுத்தினால் போதுமானது. இப்படிப்பு, 48 வாரத்துக்கு வாராந்திர வகுப்புகளாக வாரம் தோறும் சனி அல்லது ஞாயிறுக்கிழமை மட்டும் நடைபெறும்.

இப்பட்டய படிப்பின் மூலமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து இடுபொருள் விற்பனையாளர்களும், இடுபொருள்கள் பற்றிய அடிப்படை விவரம், வேளாண்மை சார்ந்த முக்கியத் தொழில் நுட்பங்கள் போன்றவற்றை தெரிந்த கொள்ளலாம். இப்படிப்பை இதுவரை பயிலாத விற்பனையாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி படிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், ‘திட்ட இயக்குனர் மற்றும் வேளாண் இணை இயக்குனர், வித்யா நகர், திண்டல்மேடு, ஈரோடு 638012 என்ற முகவரியிலும், pdatmaerd@gmail.com < mailto:pdatmaerd@gmail.com > எனும் மின்னஞ்சலிலும், 0424 2998088 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேளாண்மை விரிவாக்க சேவைக்கான பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Agriculture Extension Service ,Collector ,Rajagopal Sunkara ,Agriculture Department ,Extension Service ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...