×

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பழநியில் கடைகளை அடைத்து போராட்டம்

 

பழநி, ஜன. 19: பழநி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் தைப்பூசம், பங்கு உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, நவராத்திரி என வருடம் முழுவதும் திருவிழாக்கள் இருந்து கொண்டே இருக்கும். வருடத்திற்கு சுமார் 1.20 கோடி பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவாரம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடிவார பகுதியில் கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்தவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட்டது.

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் பேரில், கடந்த வாரம் பழநி அடிவார பகுதியில் கோயில் நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும் என நகராட்சி அறிவித்தது. கடைகள் அகற்றப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும் ஜன.18ல் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே வியாபாரிகள் அறிவித்திருந்தனர். இதன்படி, நேற்று பழநி அடிவாரம் சன்னதி வீதிகளில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

The post ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பழநியில் கடைகளை அடைத்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Palani Adiwar ,Dandayuthapani ,Swamy ,Temple ,Tamil Nadu ,Thaipusam ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...