×

விபத்து மரணங்களை குறைக்க சாலை பாதுகாப்பு திட்டம் குறித்து ஆலோசனை

சென்னை, ஜன.19: சென்னையில் சாலை விபத்து மரணங்களை குறைக்க சாலை பாதுகாப்பு செயல்திட்டம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். 2வது சாலைப் பாதுகாப்பு மற்றும் மோட்டார் அல்லாத துணைக் குழுக் கூட்டம் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் வளாகத்தில் நடைபெற்றது. இந்த துணைக்குழு கூட்டம் சென்னை சாலை பாதுகாப்பு செயல்திட்டத்தின் படி விபத்து இறப்பு குறைப்பு இலக்குகள் மற்றும் குறிப்பிட்ட செயல்திறன் இலக்குகளை அடைவது இக்குழுவின் இலக்காகும்.

போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும சிறப்பு அதிகாரி ஜெயக்குமார், போக்குவரத்து துறை, தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடியில் சாலைப் பாதுகாப்பின் நிலை, சாலை விபத்து தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு, புதிய நகர்ப்புற சாலை தரநிலைகளை பின்பற்றுதல், சாலை அடையாளங்கள் மற்றும் பலகைகளை பராமரித்தல், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு ஹெல்மெட் அமலாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பணிக்குழுவை உருவாக்குதல். சாலை பாதுகாப்பு பொறியியல் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

The post விபத்து மரணங்களை குறைக்க சாலை பாதுகாப்பு திட்டம் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,DEPARTMENT ,and Non-Motor Sub-Committee Meeting ,Chennai Integrated Transport Group ,Dinakaran ,
× RELATED சென்னையில் பேருந்து நிறுத்தங்களில்...