×

சேலம் திமுக இளைஞர் அணி மாநில மாநாடுக்கு எம்பி., அழைப்பு

ராசிபுரம், ஜன.19: சேலத்தில் வரும் 21ம்தேதி நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி., வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி அறிவுரையின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக், ஆர்.புதுப்பாளையம் ஊராட்சியில் வெள்ளை சீருடை மற்றும் அழைப்பிதழ்களை, இளைஞர் அணியினருக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் மற்றும் துணை அமைப்பாளர்கள் வித்யாசாகர், அருள், கிளை செயலாளர்கள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post சேலம் திமுக இளைஞர் அணி மாநில மாநாடுக்கு எம்பி., அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Salem DMK youth team ,conference ,Rasipuram ,2nd State Conference ,DMK Youth Team ,Salem ,Namakkal East District DMK Youth Team ,District Secretary ,Rajesh Kumar ,Vennantur Union ,Duraisamy ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து