×

2 டாஸ்மாக் கடைகள் இடமாற்றம்

சேந்தமங்கலம். ஜன.19: சேந்தமங்கலம் அடுத்துள்ள காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில், கொல்லிமலை செல்லும் பிரதான சாலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. பிரதான சாலையின் ஓரத்தில் மதுக்கடை செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் சென்று வர மிகவும் இடையூறாக இருந்தது. தற்போது காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலை செல்லும் சாலையில், கழிவுநீர் வாய்க்கால் மற்றும் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு செயல்பட்டு வந்த 2 மது கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மது கடைகளை அப்பகுதியில் உள்ள மயானம் அருகே இடமாற்றம் செய்ய உத்தரவிட்டது. தற்போது இரண்டு கடைகளும் மயானம் அருகே செயல்பட்டு வருகிறது.

The post 2 டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Senthamangalam ,2 TASMAC shops ,Kollimalai ,Kalapanayakanpatti ,2 Tasmac ,Dinakaran ,
× RELATED மாதிரி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு வரவேற்பு