×

பைக்குகள் மோதல் 5 பேர் பரிதாப பலி

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சுடையாம்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த டேவிட் (25). சரவணன் (18) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு பைக்கில் ஜங்களாபுரம் பிரிவு என்ற இடத்தில் முன்னே சென்ற காரை கடக்க முயன்றனர். அப்போது எதிரில் வந்த மற்றொரு பைக், இவர்களது மீது மோதியது. இதில் டேவிட், சரவணன், மற்றொரு பைக்கில் வந்த கெளதம் (18) ஆகிய 3 பேர் இறந்தனர். இதேபோல் திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் 2 பைக்குகள் மோதிய விபத்தில் பாபு (47) மற்றும் அவரது இளைய மகன் சிவா (22) ஆகியோர் உயிரிழந்தனர்.

The post பைக்குகள் மோதல் 5 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : SENTHAMANGALAM ,DAVID ,BACHUDAYAMBATI PUDUR ,SENTHAMANGALAM, NAMAKAL DISTRICT ,Saravanan ,Jamalapuram Division ,Dinakaran ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை