×

மணல் குவாரி விவகாரம் அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி: மணல் குவாரி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மணல்குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து பத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநில நீர்வளத்துறையின் மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலும், அதேபோன்று தமிழ்நாடு பொது மற்றும் மறுவாழ்வுத்துறை ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாகத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post மணல் குவாரி விவகாரம் அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : Sand Quarry Case Enforcement Department ,Supreme Court ,New Delhi ,Enforcement Directorate ,High Court ,Tamil Nadu ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு