×

ஃபிரோசா என்ற டர்க்காய்ஸ் உபரத்தினம்

லேசான பச்சையும் கடல் நீலமும் கலந்த எளிதில் உடையாத கம்பியால் கீறினால் கீறல் விழும் டர்க்காய்ஸ், எளிதில் உடைய கூடியது. வெளிச்சம் அதிகமாக ஊடுருவாதது. மென்மையானது.

துருக்கி வரவு

கி.மு.4000-ல் டர்க்கி அதாவது துருக்கி எனப்படும் நாட்டில் இருந்து ஐரோப்பாவுக்குக் கொண்டுவரப்பட்டதால், `டர்கிஷ் ஸ்டோன்’ என்று ஐரோப்பாவில் அழைத்தனர். இந்த டர்க்காய்ஸ், டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்ட கல் ஆகும். குரு, ராசியான தனுசு ராசிக்கு உரியது. தேவகுருவான வியாழ பகவானின் ஆதிபத்தியத்திற்கு உட்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக விளங்க இந்த உபரத்தினம் உதவும்.

காதல் பரிசு

‘காதல் உறவாட கட்டிலிடு கண்ணே’ என்று பாடுவதற்குப் பதிலாக காதல் உறவாட `டர்க்காய்ஸ் போடு கண்ணே’ என்று பாடலாம். குரு போக காரகன் என்பதால் போகத்திற்கு உதவக் கூடியது டர்க்காய்ஸ். காதலர் தினத்திற்கு பரிசாக கொடுக்கப்படும் கல், பதினோராவது திருமண நாளுக்கு பரிசாக வழங்க வேண்டிய ரத்தினம் டர்க்காய்ஸ்.

காதலில் வசியம்

டர்க்காய்ஸ் வசிய சக்தி கொண்டது என்பதால், முதன் முதலில் காதலைத் தெரிவிக்க போகிறவர் டர்க்காய்ஸ் அணிந்து கொண்டு சென்றால், அந்த காதல் நிரந்தரமான காதலாக வாழ்க்கை நெடுகிலும் தொடர்ந்து வந்து, அன்பும் ஆதரவும் அளிக்கும் காதலாக விளங்கும்.

இணைபிரியாத இன்பம்

திருமணத்தடை உள்ளவர்கள், மண வாழ்க்கையில் பிரச்னை உள்ளவர்கள், தாம்பத்தியத்தில் குறைபாடு உள்ளவர்கள், போகக்காரனான குருவிற்கு உரிய டர்க்காய்ஸ் உபரத்தினத்தை அணிந்தால், வியாழ நோக்கம் கிடைத்து திருமணம் நடைபெறும். தாம்பத்திய வாழ்வில் இருக்கும் பிரச்னைகள் நீங்கி போக சக்தி கிடைக்கும். குழந்தை பேறு சித்தியாகும். சத்புத்திரன் பிறப்பான்.

நோய் விலகும்

டர்க்காய்ஸ், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதால் டெங்கு, கொரோனா, சிக்குன் குனியா, டைஃபாய்டு போன்ற நோய்கள் தாக்காது. டர்க்காய்ஸ், மனதில் சமநிலையை ஏற்படுத்துவதால் மனஅழுத்தம் மனக் கவலை போன்ற பாதிப்பிலிருந்து விடுபடலாம். ஆக்க சக்தியை ஊட்ட வல்லது என்பதால் களைப்பு, சோர்வு, அச்சம், சோம்பேறித்தனம் ஆகியன டர்க்காய்ஸ் அணிந்தவர்கள் பக்கம் வரவே வராது. மனம் சுறுசுறுப்பாகி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும், தகுதி தேர்வில் வெற்றி பெறவும், டர்க்காய்ஸ் அணிவது நல்ல பலனைத் தரும்.

உடம்பில் வலிமையும் மனதில் புத்துணர்ச்சியும்

டர்க்காய்ஸ் நல்ல உடல் வலிமையைத் தரும். படைப் பாற்றலை மிகுவிக்கும். பேச்சுத்திறனை அதிகரிக்கும். எதிர்மறை சக்தி விலகும். கண் திருஷ்டி, ஏவல், பில்லி சூனியத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும். தீய சக்தியின் தாக்குதலில் இருந்து விடுபட உதவும். உடம்பின் தசை அணுக்கள், ரத்த அணுக்கள், எலும்பு அணுக்களைப் பெருக்கும். எனவே தீவிரமான நோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு சுகமடைந்து வருவோர் (convalescent period) புத்துணர்ச்சி பெற்று விரைவில் எழுந்து பழையபடி நடமாடவும் டர்க்காய்ஸ் அணிவது நல்ல பலனைத் தரும்.

தொழிலில் நேர்மை

டர்க்காய்ஸ் அணிபவர்களால், தீமையான விஷயங்களை நினைத்துப் பார்க்கக்கூட இயலாது. ஏனென்றால் இது குருவின் ராசிக்கல். குரு, தேவ குரு என்பதால் மனதில் நல்ல சிந்தனையும் தெளிந்த அறிவும் துல்லியமான பேச்சும் இருக்குமே தவிர கயமையை நாடி மனம் செல்லாது. எனவே, டர்க்காய்ஸ் அணிந்திருப்பவர் தன் முதலாளிக்கு விஸ்வாசமாகவும், தன் வாழ்க்கைத் துணைக்கு உண்மையாகவும் இருப்பார்கள்.

எந்தத் தொழிலுக்கு ஏற்றது?

டர்க்காய்ஸ், பஸ், லாரி உரிமையாளர்களுக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொழில் சார்ந்தவர்களுக்கு பெரும் லாபத்தை தரும். சுத்தம் செய்யும் பொருட்களான சோப்பு, ஷாம்பூ போன்ற பொருள் தயாரிப்பவருக்கும், தோல் சம்பந்தப்பட்ட மாய்ஸ்சரைசர் பவுண்டேஷன் க்ரீம், ஆயில் போன்ற அழகு சாதன பொருட்கள், தோல் வியாதிகளுக்கான மருந்து தயாரிக்கும் தொழிலதிபர்கள் டர்க்காய்ஸ் அணியலாம். அணிமணிகளில் ஆபரணங்களில் பெண்கள் தொடர்பான சங்கிலி, பதக்கம், தோடு, மூக்குத்தி, நத்து, கை வளையல், வங்கி, ஒட்டியானம், கவர்னர் மாலை, மாங்காய் மாலை, ஏலக்காய் மாலை, பதக்கம், சங்கிலி, மிஞ்சி, மெட்டி, கொலுசு, சதங்கை போன்ற அணிகலன்கள் தயாரிப்பவரும் விற்பவரும் டர்க்காய்ஸ் அணிவதால் நல்ல லாபம் அடைவர்.

தொடர்பியல் துறையில்; பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகத்துறையில் சிறப்பாக செயல்படவும், லாபம் அடையவும், அவர்கள் சிந்தனைகளை துல்லியமாகவும் மிகச் சரியாகப் புலப்படுத்தவும் டர்க்காய்ஸ் உதவும். அடுத்தவர் மீது அன்பும் கருணையும் கொள்வதற்கு டர்க்காய்ஸ் உதவும் என்பதால், சமூகப் பணியில் இருப்பவர்கள் மருத்துவர், தாதியர், துப்புரவுப் பணியாளர் போன்றவர்கள் அணிந்து நிம்மதியும் மன நிறைவும் பெறலாம்.

நிறத்தின் அதிர்ஷ்டம்

கோ டேடி (Go Daddy), நெல்கோ (Nelco), ஹேப்பி ஸ்கின் (Happy skin), தெர்மா பி (Therma B), ஸ்கை ஸ்கேனர் )Sky Scanner) டிக்கெட்ஸ் (Ticets) போன்ற நிறுவனங்கள் டர்க்காய்ஸ் ப்ளூ நிறத்தை தங்களுடைய லோகோவில் பயன்படுத்துகின்றனர். நம்முடைய தொழில்களுக்கும் டர்க்காய்ஸ் நிறத்தை வணிக முத்திரைகளில் (லோகோவில்) பயன்படுத்தலாம்.

நிறமும் பலனும்

டர்க்காய்ஸ் கற்களில் காணப்படும் நீலம் என்ற நிறம், கடலின் நீல நிறத்தைப் பிரதிபலிப்பதால் மன அமைதியைக் கொண்டு வரும். அதில் உள்ள பச்சை நிறம் வளர்ச்சியைத் தரும். மஞ்சள் நிறம் சக்தியை அதிகரிக்கும். நீல நிறம் அமைதியை வழங்கும்.

மகர ராசிக்கு உறுதுணை

தனுசு ராசிக்காரர்களுக்கு உரியது டர்க்காய்ஸ் என்றாலும்கூட, மகர ராசியினருக்கு இது அடிப்படை தேவைகளுக்கான அவசிய ரத்தினமாகும். மகர ராசியினர் சனி, சந்திரன் சேர்க்கையால் சஞ்சலமும் முடிவெடுக்க முடியாத தடுமாற்றமும் உடையவராக இருப்பார்கள். மனதிற்குள் யாரைப் பார்த்தாலும் அச்சமும் சந்தேகமும் தோன்றும். டர்க்காய்ஸ் அணிந்தால் விசுத்தி சிறப்பாக செயற்படும். பேச்சில் துணிவும் தெளிவும் பிறக்கும். மனம் திறந்து பிறருடன் பேசவும் பிரச்னைகளை விவாதிக்கவும் முடிவுகளைக் கண்டடையவும் எப்போதும் அலைபாயும் மனதைத் திடப்படுத்தவும் டர்க்காய்ஸ் உதவும்.

எங்கே அணிய வேண்டும்?

தேவகுருவான வியாழபகவானின் உபரத்தினம் பதித்த மோதிரத்தை வலது கையில் சனி விரலில் அணியலாம்.

எப்படி அணிய வேண்டும்?

டர்க்காய்ஸ் அணியும் முன்பு தங்களின் குருநாதரையோ, குலதெய்வத்தையோ நினைத்து பூசை செய்ய வேண்டும். டர்க்காய்சை ஓடுகின்ற தண்ணீரில் கழுவ வேண்டும். கிடை நீரில் போட்டு எடுக்கக் கூடாது. சூரிய ஒளி, சந்திர ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். பின்பு அமைதியாக அமர்ந்து மூச்சுப் பயிற்சி தெரிந்தவர்கள் பிராணாயாமம் செய்யலாம். மனதை சுத்தப்படுத்தி எண்ணங்களை நிலைப்படுத்தி தியான நிலைக்கு வந்த பின்பு ஆழ்நிலை தியானத்தில் சிறிது நேரம் இருந்து பின்பு மோதிரத்தைக் கையில் எடுத்து விரலில் அணியலாம்.

தொகுப்பு: பிரபா எஸ்.ராஜேஷ்

The post ஃபிரோசா என்ற டர்க்காய்ஸ் உபரத்தினம் appeared first on Dinakaran.

Tags : Turkey ,Europe ,Dinakaran ,
× RELATED சென்னை ஏர்போர்ட்டுக்கு 6வது முறையாக...