×

ஈரானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழப்பு!

ஈரானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்குள் நேற்று ஈரான் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் சப்பார் பகுதியை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் டெய்லி பத்திரிகை தெரிவிக்கின்றது. பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட சன்னி பிரிவை சேர்ந்த ஜெய்ஷ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பை இலக்காக கொண்டு ஈரான் அரசு, ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் பலூசிஸ்தானில் நடந்த இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர் என இஸ்லாமாபாத் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சூழலில், ஈரானுக்கு எதிராக பாகிஸ்தான் இன்று தாக்குதலில் ஈடுபட்டது. இதன்படி, ஈரானின் சப்பார் பகுதியை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், ஈரான் நாட்டு பகுதியில் அமைந்த பயங்கரவாத முகாம்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த இந்த தாக்குதல் எதிரொலியாக ஈரானுக்கான தன்னுடைய தூதரை பாகிஸ்தான் திரும்ப அழைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப இருந்த ஈரான் தூதருக்கான அனுமதியையும் மறுத்தது. இது சட்டவிரோத தாக்குதல் என்றும் கண்டனம் தெரிவித்தது. ஈரான், தன்னுடைய தற்காப்புக்காக இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என்பது புரிந்து கொள்ள முடிகிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. எனினும், பாகிஸ்தான் மண்ணில் உள்ள ஈரான் பயங்கரவாதிகளையே நாங்கள் தாக்கினோம் என்று ஈரான் பதிலளித்தது.

 

The post ஈரானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Iran ,Pakistan ,Sabar region of ,Dinakaran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...