×

பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

ராதாபுரம்,ஜன.18: பொங்கல் விழாவை முன்னிட்டு ராதாபுரம் தொகுதியில் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை நெல்லை ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அறிவுறுத்தலின் பேரில் ராதாபுரம், சீலாத்திகுளம், பரமேஷ்வரபுரம், கூடன்குளம், நக்கநேரி, உதயத்தூர், பெருங்கண்ணங்குளம், பாவிரிதோட்டம், கொத்தன்குளம், கோட்டைக்கருங்குளம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நெல்லை ஏ.ஆர்.ரகுமான் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அத்துடன் விதவைகளுக்கு நிதியுதவியும் வழங்கினார். தொடர்ந்து விஜயாபதியில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பொங்கலிட்டு, அவர்களுக்கு அரிசி, கரும்பு மற்றும் வெகுமதி வழங்கினார். நிகழ்ச்சியில் ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் பொன்மீனாட்சி அரவிந்தன், கவுன்சிலர் பரிமளம், கும்பிகுளம் ஊராட்சி தலைவர் சந்தனமாரி வேணுகோபால், விஜயாபதி ஊராட்சி தலைவர் சகாயராஜ், ஜெய்பீம் அசோசியேசன் தலைவர் ஸ்டாலின், திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை தலைவர் அருண்ஜெபா, கிளை செயலாளர் காமநேரி சந்தோஷ், தில்லைவனம்தோப்பு குணசேகரன், தோமையார்புரம் ரீகன், ஆவுடை குருவிமுருகன், ஜெயலிங்கம், காடுதுலா இசக்கியப்பன், கொத்தங்குளம் சுந்தர்ராஜ், விஜயாபதி மீரான், இஸ்மத், முகைதீன், ஆசிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Radhapura ,Raguman ,Nella ,East District ,Auvadiappan ,Seelathikulam ,Parameshwarapuram ,Dinakaran ,
× RELATED நாசுவம்பாளையத்தில் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழா