×

குருவாயூர், திருப்ரையார் கோயில்களில் பிரதமர் மோடி சாமி தரிசனம்: நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்திலும் பங்கேற்பு

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி ேநற்று காலை குருவாயூர் மற்றும் திருப்ரையார் கோயில்களில் சாமி தரிசனம் செய்தார். குருவாயூர் கோயிலில் நடந்த நடிகர் சுரேஷ் கோபியின் மகளின் திருமணத்திலும் அவர் கலந்து கொண்டார்.
கேரளாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை வந்தார். நேற்று காலை குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், 8.45 மணியளவில் நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவின் திருமணத்தில் கலந்து கொண்டார். இந்த திருமணத்தில் பிரபல மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், திலீப் ஆகியோரும் பங்கேற்றனர். அவர்களை மோடி சந்தித்து பேசினார். அதே சமயத்தில் மேலும் பல ஜோடிகளுக்கு அங்கு திருமணம் நடந்தது. அந்த மணக்களையும் பிரதமர் மோடி ஆசிர்வதித்தார். அதன் பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்ரையார் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ஸ்ரீராமசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். இதன்பிறகு விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

* தாமரை மலர்களால் துலாபாரம்

குருவாயூர் கோயிலில் துலாபார வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பக்தர்கள் தங்களது எடைக்கு எடை பழம், சர்க்கரை உள்பட விருப்பப்பட்ட பொருட்களை கோயிலுக்கு காணிக்கையாக வழங்குவார்கள். பிரதமர் மோடி தாமரை மலர்களால் துலாபாரம் நடத்தினார். குருவாயூர் கோயிலில் சுமார் 45 நிமிடங்கள் அவர் இருந்தார்.

* கப்பல் துறையில் இந்தியா வேகமாக வளர்கிறது

கொச்சி கப்பல் கட்டும் தொழிற்சாலையில் ரூ.4000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியது: சமீபகாலமாக நம் நாட்டின் துறைமுகங்கள் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. இந்தியாவின் துறைமுகத் துறையை பெரும் சக்தியாக மாற்ற வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாகும். இதன் மூலம் கொச்சி மட்டுமில்லாமல் அருகிலுள்ள கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களின் வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post குருவாயூர், திருப்ரையார் கோயில்களில் பிரதமர் மோடி சாமி தரிசனம்: நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்திலும் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Swami Darshan ,Guruvayur ,Thiruprayar Temples ,Suresh Gopi ,Thiruvananthapuram ,Tiruprayar ,Guruvayur temple ,Kerala ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...