×

புதுமாப்பிள்ளைக்கு 225 வகை உணவுகளுடன் விருந்து

திருமலை: ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் ராஜவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காக்கிநாகேஸ்வரராவ்-லட்சுமி தம்பதியின் மகள் ஜோத்ஸ்னா(22). இவருக்கும் விஜயவாடாவை சேர்ந்த லோகேஷ்சாய்(27) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. லோகேஷ்சாய் பெங்களூரில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் மகர சங்கராந்தி(பொங்கல்) பண்டிகையையொட்டி புதுமண தம்பதியை பெண்ணின் வீட்டினர் அழைத்தனர். அங்கு மருமகன் வாழ்நாளில் மறக்க முடியாத வகையில் பல்வேறு வகையான இனிப்பு மற்றும் அறுசுவை விருந்து என 225 வகையான உணவு வகைகளை பரிமாறி விருந்து வைத்தனர்.

The post புதுமாப்பிள்ளைக்கு 225 வகை உணவுகளுடன் விருந்து appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Jyothsna ,Kakinageswararao-Lakshmi ,Rajavaram ,Elur district, Andhra state ,Lokeshsai ,Vijayawada ,Bangalore ,Makara ,Pudumapillai ,
× RELATED திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய செயல் அதிகாரி நியமனம்