×

ஜன.22 கும்பாபிஷேகம் அயோத்தி ராமர் கோயிலில் பூஜைகள் தொடக்கம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22ம் தேதி மதியம் 12.20 மணிக்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பான பூஜைகள் நேற்று முறைப்படி தொடங்கின. இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளை வௌியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று குழந்தை ராமர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, வளாக நுழைவு வாயில் பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து நாளை விநாயகர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி சிறப்பு மந்திரங்கள் ஓதி, வருண பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்டவை முறைப்படி நடக்கும். தொடர்ந்து 3 நாட்களுக்கு பல்வேறு பூஜைகள் முறைப்படி நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.

The post ஜன.22 கும்பாபிஷேகம் அயோத்தி ராமர் கோயிலில் பூஜைகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Ayodhya Ram Temple ,Ayodhya ,Rama ,Ram ,Ram Temple Pujas ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்திய அர்ச்சகர் மரணம்