×

404 நாட் அவுட்!

கூச் பேஹர் டிராபி யு-19 தொடரின் பைனலில் மும்பை அணியுடன் மோதிய கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது. மும்பை அணி முதல் இன்னிங்சில் 380 ரன் குவித்து ஆல் அவுட்டான நிலையில், கர்நாடகா 8 விக்கெட் இழப்புக்கு 890 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. கர்நாடகா அணி தொடக்க வீரராகக் களமிறங்கிய பிரகார் சதுர்வேதி 404 ரன்னுடன் (638 பந்து, 46 பவுண்டரி, 3 சிக்சர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 24 ஆண்டுகளுக்கு முன்பாக கூச் பேஹர் பைனலில் யுவராஜ் சிங் 358 ரன் விளாசி படைத்த சாதனையை பிரகார் முறியடித்தார். இந்த தொடரின் 2011-12 சீசனில் அசாம் அணிக்கு எதிராக விஜய் ஸோல் 451* ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. அந்த வரிசையில் பிரகார் 2வது இடம் பிடித்துள்ளார்.

* 2023ம் ஆண்டின் ஃபிபா சிறந்த கால்பந்து வீரராக அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினின் அய்டனா பான்மதி தட்டிச் சென்றார்.
* டெல்லியில் நடக்கும் இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 21-6, 21-19 என்ற நேர் செட்களில் சீன தைபே வீரர் சோவ் டியன்னை வீழ்த்தினார்.
* ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று காலை 5.00 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
* நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளிடையேயான 3வது டி20 போட்டி, டுனெடின் பல்கலை. ஓவல் மைதானத்தில் இன்று காலை 5.30க்கு தொடங்கி நடைபெறுகிறது.

The post 404 நாட் அவுட்! appeared first on Dinakaran.

Tags : Cooch Behar ,U-19 ,Mumbai ,Karnataka ,Dinakaran ,
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...