×

நீலகிரியில் 2 நாட்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: நீலகிரியில் 2 நாட்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 18 முதல் 20ம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

21,22 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

The post நீலகிரியில் 2 நாட்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Meteorological ,Chennai ,Chennai Meteorological Centre ,Coral Sea ,Tamil Nadu ,Puduwai ,Neelgiri ,Meteorological Survey Center ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி...