×

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மிலிந்த் தியோரா சிவசேனாவில் இணைந்தார்

மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முரளி தியோரா. இவர் ஒன்றிய அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவரது மறைவுக்கு பிறகு இவரது மகன் மிலிண்ட் தியோரா தனது தந்தையின் தெற்கு மும்பையில் 2 முறை எம்.பி. ஆனார். 2011ம் ஆண்டு மிலிண்ட் தியோரா ஒன்றிய அமைச்சரானார். கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் 2014ம் ஆண்டு தேர்தலிலும், 2019ம் ஆண்டு தேரத்லிலும் மிலிண்ட் தியோரா சிவசேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்திடம் தோற்றுவிட்டார். தற்போது, இந்தியா கூட்டணியில் சிவசேனா உத்தவ் பிரிவு இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தெற்கு மும்பை தொகுதி உத்தவ் பிரிவுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மிலிண்ட் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில், 55 ஆண்டுகள் தங்கள் குடும்பம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியதாகவும் இப்போது அதன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு அவர் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஷிண்டேயை சந்தித்து சிவசேனாவில் சேர்ந்தார். மூத்த தலைவரான தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதும், சிவசேனாவில் இணைந்ததும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மிலிந்த் தியோரா சிவசேனாவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Milind Deora ,Congress ,Shiv Sena ,Mumbai ,Murali Deora ,Maharashtra ,South Mumbai constituency ,
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை