×

நாகப்பட்டினம் அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் சமத்துவ பொங்கல்

 

நாகப்பட்டினம்,ஜன.14: நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நாகப்பட்டினம் அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் காந்தி தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலம்(கல்வி) சென்னை மண்டல இணை இயக்குநர் சுப்பிரமணியன் பொங்கல் வைத்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் சாமந்தான் பேட்டை அன்னை சத்யா குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் தமிழ்ஓளி பொங்கல் வைத்தார். டில்லி உச்சநீதிமன்றம் வழக்கறிஞர் சுர்ஜித் சங்கர், ஆடிட்டர் ராகவன், அறக்கட்டளை நிறுவன தலைவர் சித்திக், வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா, நாகப்பட்டினம் நகரமன்ற உறுப்பினர் அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினம் அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் சமத்துவ பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Samatthu Pongal ,Adhi Dravidian School ,Azhinchamangalam ,Nagapattinam ,Samattva Pongal festival ,Samatthu Pongal Festival ,Adhi Dravidar Middle School ,Principal ,Gandhi ,Adi Dravidar Nalam ,Chennai Zonal Affiliate ,Ajinjamangalam Govt Adhi Dravidar School ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா