×

போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

 

கோவை, ஜன 14: 100 சதவீதம் போதை பொருட்களை தடுக்கும் விதமாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே போதை பொருட்கள் பழக்கத்தை தடுக்கும் விதமாக இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி நேற்று தொடங்கியது. இதில் 16 வயது முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அவரும் சைக்கிள் பேரணியில் பயணம் செய்தார். நிகழ்ச்சியில், சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து தொடங்கி டவுன் ஹால், செட்டி வீதி, பேரூர், பச்சாபாளையம், ஆலாந்துறை, மாதம்பட்டி, சாடிவயல், ஈஷா யோகா சென்று அடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வந்து இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

The post போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு சைக்கிள் பேரணி appeared first on Dinakaran.

Tags : Awareness cycle rally against drugs ,Coimbatore ,Coimbatore Police Commissioner ,Awareness cycle rally against ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்