×

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரெடிமேட் கழிப்பறைகள்

 

ஈரோடு, ஜன. 14: ஈரோடு மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க புதிதாக 4 ரெடிமேட் கழிப்பறைகள் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளது. ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில், பொதுமக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கட்டண கழிப்பறைகள், இலவச பொதுக்கழிப்பறைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இதில், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சாலைகள், பஸ் ஸ்டாப் பகுதிகளில் கழிப்பறைகள் போன்றவை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் மற்றும் ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில், மாநகராட்சி பொது நிதியில் இருந்து முதற்கட்டமாக 4 ரெடிமேடு கழிப்பறைகள் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த கழிப்பறைகள் நேற்று காலை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தது. இதனை முக்கிய சாலைகள் மற்றும் பஸ் ஸ்டாப் பகுதிகளில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் கூறுகையில்,“ஈரோடு மாநகர பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முதற்கட்டமாக 4 ரெடிமேடு கழிப்பறைகள் வந்துள்ளது. இது தற்போது காளைமாட்டு சிலை, ஈரோடு காந்திஜி சாலை எஸ்பி அலுவலகம் அருகே உள்ள பஸ் ஸ்டாப், ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை பகுதி, மீனாட்சி சுந்தரனார் சாலை ஆகிய 4 இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பொறியாளர் பிரிவு அலுவலர்கள் செய்து வருகின்றனர்’’ என்றார்.

The post மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரெடிமேட் கழிப்பறைகள் appeared first on Dinakaran.

Tags : Erode ,Corporation ,Erode Corporation ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலினால்...