×

திருப்பதியில் நாளை முதல் மீண்டும் சுப்ரபாத சேவை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். புனிதமான மார்கழி மாதம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நள்ளிரவு 12.34 மணிக்கு தொடங்கியது. இதனால் அன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு திருப்பாவை பாராயணம் நடந்தது. இந்நிலையில் இன்றுடன் மார்கழி மாதம் நிறைவடைவதால், ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை வழக்கம் போல் நாளை முதல் நடைபெறும்.

The post திருப்பதியில் நாளை முதல் மீண்டும் சுப்ரபாத சேவை appeared first on Dinakaran.

Tags : Subrabada ,Tirupati ,Tirumala ,Devasthanam ,Subrapada ,Tirupati Eyumalayan Temple ,Margazhi ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...