×

தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்திய நிலையில் முதலமைச்சர் பதிவு

சென்னை: தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்திய நிலையில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளதாவது; “தமிழ்நாடு அடுத்தடுத்து சந்தித்த இருவேறு பேரிடர்களிலிருந்து மீள்வதற்குத் தேவையான நிதியை வழங்க வலியுறுத்தி, நமது அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துக் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஒன்றியக் குழுக்களும் வந்து பார்வையிட்டு சென்றுள்ள நிலையில், நமது கருத்துகளை உள்வாங்கி உரிய நிவாரணத்தொகையை ஒன்றிய அரசு வழங்கும் என நம்பிக்கை கொள்வோம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்திய நிலையில் முதலமைச்சர் பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,M. B. ,Chief Minister ,Union Minister ,Amitsha ,Chennai ,Minister of Interior ,Amitshah ,Dinakaran ,
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!