தை 1-ம் தேதி, மகர சங்கராந்தி!! உத்தராயண புண்ணிய காலம்!!!
15-01-2024, திங்கள்கிழமை: பொங்கல் பண்டிகை, சுக்கிலபட்சம் (வளர்பிறை), சதுர்த்தி திதி, சதய நட்சத்திரம் கூடிய சுபயோக, சுப நன்னாளில், வீட்டைச் சுத்தம் செய்து, காலை 6:30 முதல் 7:30, காலை 9:30 முதல் 10:30 மகர லக்னத்தில், கோலமிட்டு, மலர்கள், கனிகள், கரும்புத் துண்டு ஆகியவற்றால் பொங்கல் புதுப் பானையை அலங்கரித்து, குலதெய்வம், இஷ்ட தெய்வம், பித்ருக்கள் ஆகியோரை மனதால் வணங்கி, புதுப் பானை வைத்து, பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு அமுது செய்வித்தல் வேண்டும். வருடம் முழுவதும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன நிறைவும், லசுமி கடாட்சமும், நிலவும்.
மறுநாள் தை 2-ம் தேதி (16-1-2024) செவ்வாய்க்கிழமையன்று, அதிகாலையிலேயே நீராடி, அவரவர் குல வழக்கப்படி, திருநீறு, திருமண் அணிந்து, பசுக்கள், காளைகள், கன்றுகள் ஆகியவற்றை நீராட்டி, மஞ்சள், குங்குமம் இட்டு, மலர்கள் சூட்டி, தூப-தீபம் காட்டி, மும்முறை வலம் வந்து, வணங்க வேண்டும். பாவங்கள் அகலும்; புண்ணியம் சேரும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பொங்கும். நம்மை வாழ வைக்கும் தாயே, பசுவின் உருவில் காட்சியளிப்பதாக வேதங்கள் கூறுகின்றன.
17-01-2024 காணும் பொங்கல்! காலையில் நீராடி, புத்தாடை அணிந்து, தாய் – தந்தையரை, பெரியோர்களைக் கண்டு வணங்கி அவர்களின் ஆசியைப் பெற்று மகிழ வேண்டிய புண்ணிய தினம்.
The post பொங்கல் பானை வைக்கவேண்டிய நேரம்! appeared first on Dinakaran.