×

தேவகோட்டை அருகே மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தேவகோட்டை, ஜன.13: தேவகோட்டை வட்டாரம் கீழஉச்சாணி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22ல் தொடங்கப்பட்ட கட்டார் தரிசு நிலத்தொகுப்பினை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆணையர் லால்வேனா, உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்தார்.

கட்டனூர் கிராமத்தில் வேளாண்மைத் துறை மூலம் 15 விவாசயிகளின் 15.04 ஏக்கர் தரிசு நிலங்களை ஒன்றிணைத்து, அதிலிருந்த கருவேல மரங்களை அகற்றி வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மும்முனை மின்சாரத்துடன் கூடிய புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, தோட்டக்கலைத்துறையின் மூலம் உருவாக்கப்பட்ட இமாம்பசந்த், பங்கனபள்ளி,பெங்களூரா போன்ற உயர்விளைச்சல் மா ரகங்களின் பக்க ஒட்டுக்கன்றுகள் நடப்பட்டு அனைத்து கன்றுகளுக்கும் சொட்டுநீர் பாசன வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், வேளாண்மை உதவி இயக்குநர் காளிமுத்து, தோட்டக்கலை உதவி இயக்குநர் சத்யா, வேளாண்மை பொறியியல் துறையாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மற்றும் வேளாண்மை அலுவலர் கமலாதேவி, துணை வேளாண்மை அலுவலர் முத்தையா, உதவி வேளாண்மை அலுவலர்கள் சர்பின்சா, செல்வி.அபிராமி, அட்மா திட்டம் குருதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தேவகோட்டை அருகே மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : District ,Officer ,Devakottai ,District Monitoring Officer Commissioner ,Lalvena ,Department of Food Security ,Katar ,Karanchi ,Devakota district Keezauchani ,Katanur ,Dinakaran ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...