×

டேரில் மிட்செல் அதிரடியில் நியூசி. அபார வெற்றி

ஆக்லாந்து: நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஆக்லாந்தில் நேற்று நடந்த முதல் டி20ல் டாஸ் வென்ற பாக். பந்துவீச… நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 226 ரன் குவித்தது. ஃபின் ஆலன் 34 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் வில்லியம்சன் 57 ரன் (42 பந்து, 9 பவுண்டரி), டேரில் மிட்சல் 61 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), பிலிப்ஸ் 19, சாப்மேன் 26 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பாபர் ஆஸம் 57 ரன் (35 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), சைம் அயூப் 27 ரன் (8 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ரிஸ்வான் 25 ரன் (14பந்து , 2பவுண்டரி, 2 சிக்சர்), இப்திகார் 24 ரன் (17 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். டேரில் மிட்செல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post டேரில் மிட்செல் அதிரடியில் நியூசி. அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Newsy ,Daryl Mitchell ,Auckland ,Pakistan ,New Zealand ,T20I ,Pak ,Daryl Mitchell Newsy ,Dinakaran ,
× RELATED ரூதர்போர்டு, அல்ஜாரி அதிரடியால்...