சென்னை: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1.12.2023 முதல் 31.12.2023 வரை ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்க கடத்த முயன்ற ரூ.21,17,769 மதிப்புள்ள 3118 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 350 எரிவாயு உருளைகள், 1750 லிட்டர் மண்ணெண்ணெய், 565 கிலோ கோதுமை, 577 கிலோ துவரம்பருப்பு, 25 கிலோ சர்க்கரை ஆகியவையும், 179 கடத்தல் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றச்செயலில் ஈடுபட்ட 957 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post அரிசி கடத்திய 957 பேர் கைது appeared first on Dinakaran.