×

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

தேனி: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து வருகிறது. இதனால் அருவியில் நீர்வரத்து எப்போதும் காணப்படும் என்பதால் அப்பகுதி வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைவர்.

இந்த சூழலில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

The post கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Kumbakarai Falls ,Theni ,Kumbakkarai ,Periyakulam ,Kodaikanal Western Ghats ,Kumbakarai ,Dinakaran ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...