×

பொங்கல் பொருட்கள் வாங்க பெரம்பலூரில் குவியும் பொதுமக்கள்

 

பெரம்பலூர்,ஜன.12: பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதனையொட்டி பெரம்பலூர் நகரம் பொங்கல் பொருட்கள் வாங்க குவியும் பொதுமக்களால் திக்குமுக்காடி திண்டாடி வருகிறது. குறிப்பாக பெரம்பலூர்- துறையூர் சாலையிலுள்ள பெரிய கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, பள்ளிவாசல் தெரு, என்எஸ்பி ரோடு, தினசரி காய்கறி மார்க் கெட் தெரு, காந்தி சிலை ரவுண்டானா பகுதிகளில் பொங்கல் பொருள் விற்பனை களை கட்டத் தொடங்கியுள்ளது.

கரும்பும், மஞ்சளும் மதில் போல் குவிக்கப்பட்டும், மாடுகளுக்குத் தேவையான மூக்கணாங் கயிறு, சலங்கைகள், மணிகள் பண்டிகைக்கு முந்தைய நாள்தான் விற்பனை களை கட்டும் என்பதால், அவற் றைத்தவிர பொங்கல் வைக்கத் தேவையான மண் பானைகளும் பித்த ளைப் பாத்திரங்களும் விற் பனை களை கட்டி வருகின்றன.

குறிப்பாக களி மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகள் வண்ணம் தீட்டி, குறைந்தது ரூ150 முதல் அதிகப்பட்சம் ரூ. 450 வரை விற்கப்பட்டு வருகின்றன. மேலும் புத்தாடைகள் வாங்க பெரிய கடை வீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் விதமாக மக்கள் கூட்டம் கட்டுக் கடங்காமல் அலைமோதி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கான புத்தாடைகளை ரெடிமேடாகவும், மெட் டீரிய லாகவும் வாங்கிட பெரிய கடைவீதியில் குடும்பம் குடும்பமாக மக்கள்கூட்டம் அலைமோதி வருகிறது.

மேலும் திருமணமான புதுப் பெண்ணுக்கு பெற்றோர் சீர் செய்ய பித்தளைப் பானைகள் விற்பனை சூடு பிடித்து ள்ளது. பித்தளைப் பானைகள் குறைந்தது ரூ1000 முதல் ரூ1500-க்கு மேல் விலை வைத்து விற்கப் படுகிறது. தினமும் பெரம்ப லூர் நகருக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கா னோர் வந்து குவிவதால் பெரம்பலூர் நகரம் திக்கு முக்காடி வருகிறது.

The post பொங்கல் பொருட்கள் வாங்க பெரம்பலூரில் குவியும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Pongal ,Perambalur-Dhartiyur road ,Post Office Street ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...