×

பெரம்பலூர் அருகே பழுதாகி நின்ற வேன்மீது ஆம்னி பேருந்து மோதல்: இலங்கையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் காயம்

 

பாடாலூர், ஜன. 12: இலங்கையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 3 பெண்கள் உள்பட 10 பேர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இலங்கையில் இருந்து சென்னை வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் மாலை வாடகை வேனில் சபரிமலைக்கு புறப்பட்டனர். மதுரை மாவட்டம் தவுடு சந்து பகுதியை சேர்ந்த மேகநாதன் மகன் தினேஷ்குமார் (30) வேனை ஓட்டினார். நேற்று அதிகாலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் வந்த போது வேன் திடீரென பிரேக் டவுன் ஆனது.

இதைடுத்து சாலையோரம் வேனை நிறுத்தி டிரைவர் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மற்றொரு வேன் டிரைவரும் வண்டியை நிறுத்திவிட்டு வந்து சென்னை வேன் டிரைவருக்கு உதவி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் இருந்து கம்பத்தை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து முன்னால் நின்ற சென்னை வேனில் பின்புறம் மோதியது.

இதில் வேனில் இருந்த இலங்கை பக்தர்கள் 10 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரம்பலூர் அருகே பழுதாகி நின்ற வேன்மீது ஆம்னி பேருந்து மோதல்: இலங்கையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Ayyappa ,Sri Lanka ,Badalur ,Chennai ,Sabarimala Ayyappa ,Sabarimala ,Madurai… ,Omni ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி