×

 ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரியில் தொழில் நுட்ப பயிலரங்கம்

கோவை, ஜன.12: கோவை நவ இந்தியாவில் உள்ள  ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி பயன்பாட்டுத்துறையுடன் ஆசஸ் நிறுவனம் மற்றும் பேட்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து மடிக்கணினியில் பயன்படுத்தப்படும் வன் பொருட்கள் குறித்த தொழில் நுட்பப் பயிலரங்கத்தை அக்கல்லூரி கலையரங்கில் நேற்று நடத்தியது. ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் மடிக்கணினி வர்த்தகம் மற்றும் செல்போன் விற்பனைப்பிரிவு துணைத்தலைவர் தினேஷ்சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆசஸ் நிறுவனத் தயாரிப்பு பொருட்களின் சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்றினார். ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப உற்பத்திப் பிரிவு மேலாளர் ரோஹித் ராஜன், ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் வன் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில்  ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், கணினி பயன்பாட்டுத் துறைத்தலைவர் முனைவர் ஹரிபிரசாத், பேட்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவன இயக்குநர் சஞ்சீவ்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post  ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரியில் தொழில் நுட்ப பயிலரங்கம் appeared first on Dinakaran.

Tags : Ramakrishna College of Arts and Sciences ,KOWAI ,ASUS INSTITUTE AND BATS TECHNOLOGIES INSTITUTE ,KOWAI NAVA INDIA ,
× RELATED ஜூலை 1ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்..!!