×

பெண்கள் ஏன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்?

காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வோம். ஆனால் இதுவல்ல சூரிய நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும் 12 யோகாசனங்கள்தான் சூரிய நமஸ்காரம். குறிப்பாக பெண்கள் இந்த ஆசனங்களை செய்வது அவசியம். இது அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும் அதே சமயம் ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள உதவும். சூரிய நமஸ்காரத்தின் ஆரோக்கிய நன்மைகளை பார்ப்போம்.

*12 தோரணைகளை உள்ளடக்கிய இந்த ஆசனம் செய்வதன் மூலம் பல உடல் பிரச்னைகளை தவிர்க்கலாம். இதற்கு சூரிய நமஸ்காரத்தை சரியான முறையில் செய்ய வேண்டும்.

*சூரிய நமஸ்காரத்தின் 12 தோரணைகளையும் ஒரு முறை செய்து முடிக்க 34 நிமிடங்கள் வரை ஆகலாம். நமஸ்காரத்தை செய்யும் பொழுது சுவாசிப்பதில் கவனம் செலுத்தினால் மட்டுமே முழு பலன்களையும் பெற முடியும். இந்த 12 தோரணைகளையும் சுவாசப் பயிற்சியுடன் 6 முறை செய்தால் போதுமானது. மேலும் 12 முறைக்கு மேல் செய்வதை தவிர்க்க வேண்டும்.

*தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் முகம் மற்றும் சருமத்தின் பொலிவு கூடும். இதனை தொடர்ந்து செய்து வர சுருக்கங்கள் மற்றும் ஆரம்ப கால வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கலாம். வயது கூடினாலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள், சூரிய நமஸ்காரத்தை தினமும் செய்யலாம்.

*செரிமான மண்டலத்தில் ரத்த ஓட்டம் மேம்பட மற்றும் செரிமான செயல்முறை சீராக இருக்க சூரிய நமஸ்காரம் செய்யலாம். இதில் உள்ள சில தோரணைகள் குடல் செயல்பாட்டை மேம்
படுத்துகின்றன. தொடர்ந்து செய்வதன் மூலம் வாயு, மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

*மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சூரிய நமஸ்காரத்தை தவறாமல் செய்யுங்கள்.

*நரம்பு மண்டலம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும்

*தைராய்டு பிரச்னை உள்ள பெண்களுக்கும் சூரிய நமஸ்காரம் நன்மை தரும்.

*மாதவிடாயை ஒழுங்குபடுத்தும். வயிற்று தசைகளை பலப்படுத்தி மாதவிடாய் வலியை குறைக்க சிறந்தது. சூரிய நமஸ்காரத்தை சரியான முறையில் செய்து அனைத்து பலன்களையும்
பெறுங்கள்.

 

The post பெண்கள் ஏன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்? appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஏன் எதற்கு எப்படி?