×

பொங்கல் சிறப்பு பேருந்து புறப்படும் இடம் அறிவிப்பு; கிளாம்பாக்கத்தில் இருந்து SETC பேருந்துகள் இயக்கம்..!!

சென்னை: கோயம்பேட்டில் இருந்து செல்லும் TNSTC பேருந்துகள்; கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் SETC பேருந்துகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட விரைவு போக்குவரத்து கழக (SETC) பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் SETC பேருந்துகள் விவரம்:

பொங்கலை முன்னிட்டு NH 45 வழியே செல்லும் SETC பேருந்துகள் புறப்படும் இட விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் மார்க்கமாக (NH-45) இயக்கப்படும் SETC பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், பிற பேருந்துகள் தாம்பரம் மெப்ஸில் இருந்தும் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்தவர்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து SETC பேருந்துகள் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2023 டிச.30க்கு முன்பு முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும். ஜன.12 – 14 வரை முன்பதிவு செய்தவர்களுக்கான விரைவு போக்குவரத்து கழக (SETC) பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகிறது.

கோயம்பேட்டில் இருந்து செல்லும் TNSTC பேருந்துகள்:

SETC அல்லாத பிற அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் அல்லது முன்பதிவு செய்யாதவர்கள் கோயம்பேடு செல்ல வேண்டும். விழுப்புரம், திருச்சி, மதுரை போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும். கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை போக்குவரத்து கழக பேருந்துகளும் கோயம்பேட்டில் புறப்படும். ஈசிஆர் வழியாக நாகை, கும்பகோணம், திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது.

The post பொங்கல் சிறப்பு பேருந்து புறப்படும் இடம் அறிவிப்பு; கிளாம்பாக்கத்தில் இருந்து SETC பேருந்துகள் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : SETC ,Klambakh ,Chennai ,TNSTC ,Coimbet ,Express Transport Corporation ,Glampakkam Bus Station ,Trichy National Highway ,Pongal ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...