×

கிரிக்கெட் போட்டி துவக்கம்

சேலம், ஜன.11: சேலம் மாவட்ட மாணவர் கிரிக்கெட் சங்கம் சார்பில், அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்குபெறும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நேற்று தொடங்கியது.சேலம் சூரமங்கலம் நீலாம்பாள் சுப்பிரமணியம் பள்ளியில் நடந்த போட்டியை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 10 அரசுப்பள்ளிகள், 6 உதவிபெறும் பள்ளிகள், 6 சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் 6 மெட்ரிக் பள்ளிகள் என ெமாத்தமாக 28 பள்ளிகளைச் சேர்ந்த 520 மாணவர்கள் இதில் பங்கேற்று விளையாடுகின்றனர். சேலம் சிறுமலர் பள்ளி, சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி, நீலாம்பாள் சுப்பிரமணியம் பள்ளி மற்றும் இரும்பாலை வித்யாமந்திர் பள்ளி என 4இடங்களில் போட்டிகள் நடக்கிறது. அனைவருக்கும் கிரிக்கெட் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் 66 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, தனியாக மேம்படுத்தப்பட்ட பயிற்சி வழங்கப்படும் என சேலம் மாவட்ட மாணவர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் முத்துக்குமார், பொதுச் செயலாளர் அசோக்குமார் மற்றும் இணை செயலாளர் ஐசக்ராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

The post கிரிக்கெட் போட்டி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem District Students Cricket Association ,T20 ,league ,Salem Suramangalam Neelampal Subramaniam School ,S.R. Parthipan ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...