×

₹1.50 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

அரூர், ஜன.11:அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கான மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்நடைகளை வாங்க வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடு ₹8,500 முதல் ₹45,700 வரையும், ஆடு ₹5,200 முதல் ₹9,400 வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில் மொத்தம் ₹1.50க்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ₹1.50 கோடிக்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Aroor ,Puluthiyur ,Gopinathambatti Kootrod ,Dharmapuri ,Krishnagiri ,Salem ,Namakkal ,Tiruvannamalai ,
× RELATED அரூரில் குண்டுமல்லி விலை குறைந்தது