×

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை விவாதம் 19ம்தேதிக்கு ஒத்திவைப்பு

 

புதுக்கோட்டை, ஜன.10: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஆதி திராவிடர் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் தற்போது விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், சந்தேகத்துக்குரிய 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். உண்மை கண்டறியும் சோதனை எவ்வாறு நடத்தப்படும், அதன் அவசியம் குறித்து விரிவான அறிக்கையை கடந்த 6ம்தேதி மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட அந்த 10 பேரும் (வேங்கைவயல்- 5, இறையூர்- 3, மேலமுத்துக்காடு- 2) நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்களுக்கு உண்மை அறியும் சோதனை குறித்து சிபிசிஐடி போலீசார் கொடுத்த அந்த அறிக்கையின் நகல்கள் வழங்கப்பட்டன. வரும் 9ம்தேதி விசாரணையை ஒத்திவைப்பதாகவும், அப்போது 10 பேரும் கருத்து தெரிவிக்கலாம் என்றும் நீதிபதி எஸ். ஜெயந்தி உத்தரவிட்டார்.

வேங்கைவயலில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக தொடரப்பட்ட இரு வழக்குகளும், விசாரணை அதிகாரியான துணை காவல் கண்காணிப்பாளரின் விசாரணை முறை தவறாக இருக்கிறது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இதே 19ம்தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை விவாதம் 19ம்தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : vengai ,Pudukottai ,CBCID ,Adi Dravidar ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: தேர்தல்...